Quran translations in many languages

Quran in Tamil

Al-Burûj

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[85:1]

கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,

[85:2]

இன்னும்வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,

[85:3]

மேலும்சாட்சிகள் மீதும்சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,

[85:4]

(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.

[85:5]

விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).

[85:6]

அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,

[85:7]

முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.

[85:8]

(யாவரையும்) மிகைத்தவனும்புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.

[85:9]

வானங்கள்பூமியின் ஆட்சி அவனுக்கே உரியதுஎனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.

[85:10]

நிச்சயமாகஎவர்கள் முஃமினான ஆண்களையும்முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர்தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும்கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

[85:11]

ஆனால் எவர்கள் ஈமான் கொண்டுஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோஅவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டுஅவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் – அதுவே மாபெரும் பாக்கியமாகும்.

[85:12]

நிச்சயமாகஉம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.

[85:13]

நிச்சயமாகஅவனே ஆதியில் உற்பத்தி செய்தான்மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.

[85:14]

அன்றியும்அவன் மிகவும் மன்னிப்பவன்மிக்க அன்புடையவன்.

[85:15]

(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.

[85:16]

தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.

[85:17]

(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,

[85:18]

ஃபிர்அவ்னுடையவும்ஸமூதுடையவும்,

[85:19]

எனினும்நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.

[85:20]

ஆனால்அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.

[85:21]

(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.

[85:22]

(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் – பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.