Quran translations in many languages

Quran in Tamil

Al-Mursalât

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[77:1]

தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக

[77:2]

வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-

[77:3]

(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-

[77:4]

(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-

[77:5]

(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-

[77:6]

(அந்த உபதேசம்) மன்னிப்பையோஅல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)

[77:7]

நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.

[77:8]

இன்னும்நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-

[77:9]

மேலும்வானம் பிளக்கப்படும் போது-

[77:10]

அன்றியும்மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-

[77:11]

மேலும்தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-

[77:12]

எந்த நாள்வரை (இவையெல்லாம்)பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?

[77:13]

தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.

[77:14]

மேலும்தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

[77:15]

(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.

[77:16]

முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?

[77:17]

பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.

[77:18]

குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).

[77:19]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:20]

அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?

[77:21]

பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.

[77:22]

ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.

[77:23]

இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.

[77:24]

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:25]

பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

[77:26]

உயிருள்ளோருக்கும்மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).

[77:27]

அன்றியும்அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.

[77:28]

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:29]

நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக்கொண்டிருந்தீர்களோஅதன் பால் நடப்பீர்களாக (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

[77:30]

மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.

[77:31]

(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.

[77:32]

நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.

[77:33]

நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.

[77:34]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:35]

இதுஅவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.

[77:36]

அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

[77:37]

பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:38]

இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).

[77:39]

எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால்சூழ்ச்சி செய்துபாருங்கள்.

[77:40]

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:41]

நிச்சயமாகபயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும்நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.

[77:42]

இன்னும்அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.

[77:43]

நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாகசிரமமின்றிதாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள் (என்று கூறப்படும்).

[77:44]

நிச்சயமாகஇவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.

[77:45]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:46]

(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும்சுகித்துக்கொண்டும் இருங்கள் – நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.

[77:47]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:48]

நீங்கள் குனிந்து வணங்குங்கள்‘ என்று அவர்களிடம் கூறப்பட்டால்அவர்கள் குனிந்துவணங்கமாட்டார்கள்.

[77:49]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:50]

எனவேஇதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?