Quran translations in many languages

Quran in Tamil

Al-Qâriʽah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[101:1]

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).

[101:2]

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

[101:3]

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

[101:4]

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

[101:5]

மேலும்மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

[101:6]

எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-

[101:7]

அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

[101:8]

ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-

[101:9]

அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.

[101:10]

இன்னும் (ஹாவியா‘) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

[101:11]

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.