Quran translations in many languages

Quran in Tamil

Al-Qiyâmah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[75:1]

கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

[75:2]

நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

[75:3]

(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

[75:4]

அன்றுஅவன் நுனி விரல்களையும்(முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

[75:5]

எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

[75:6]

கியாம நாள் எப்போழுது வரும்என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

[75:7]

ஆகவேபார்வையும் மழுங்கி-

[75:8]

சந்திரன் ஒளியும் மங்கி-

[75:9]

சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் .

[75:10]

அந்நாளில் “(தப்பித்துக் கௌ;ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.

[75:11]

இல்லைஇல்லை! தப்ப இடமேயில்லை! (என்று கூறப்படும்).

[75:12]

அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

[75:13]

அந்நாளில்மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

[75:14]

எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.

[75:15]

அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

[75:16]

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.

[75:17]

நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

[75:18]

எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக)அதனை நாம் ஓதி விட்டோமாயின்அப்பால்அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

[75:19]

பின்னர்அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

[75:20]

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

[75:21]

ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

[75:22]

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

[75:23]

தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.

[75:24]

ஆனால்அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

[75:25]

இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

[75:26]

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,

[75:27]

மந்திரிப்பவன் யார்எனக் கேட்கப்படுகிறது.

[75:28]

ஆனால்அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

[75:29]

இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

[75:30]

உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

[75:31]

ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லைஅவன் தொழவுமில்லை.

[75:32]

ஆகவேஅவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

[75:33]

பின்னர்அவன் தன் குடும்பத்தாரிடம் – மமதையோடு சென்று விட்டான்.

[75:34]

கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

[75:35]

பின்னரும்உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

[75:36]

வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

[75:37]

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

[75:38]

பின்னர் அவன் அலக்‘ என்ற நிலையில் இருந்தான்அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

[75:39]

பின்னர் அதிலிருந்து ஆண்பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

[75:40]

(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?