Quran translations in many languages

Quran in Tamil

Ash-Shams

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[91:1]

சூரியன் மீதும்அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக

[91:2]

(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-

[91:3]

(சூரியனால்) பகல் வெளியாகும்போதுஅதன் மீதும் சத்தியமாக-

[91:4]

(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-

[91:5]

வானத்தின் மீதும்அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-

[91:6]

பூமியின் மீதும்இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

[91:7]

ஆத்மாவின் மீதும்அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

[91:8]

அப்பால்அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும்அதன் நன்மையையும் உணர்த்தினான்.

[91:9]

அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

[91:10]

ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

[91:11]

ஸமூது‘ (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.

[91:12]

அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,

[91:13]

அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையதுஇது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.

[91:14]

ஆனால்அவர்கள் அவரைப் பொய்ப்பித்துஅதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் – ஆகவேஅவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கிஅவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.

[91:15]

அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.