Quran translations in many languages

Quran in Tamil

At-Takâthur

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[102:1]

செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-

[102:2]

நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.

[102:3]

அவ்வாறில்லைவிரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

[102:4]

பின்னர் அவ்வாறல்லவிரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

[102:5]

அவ்வாறல்ல – மெய்யான அறிவைக்கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).

[102:6]

நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

[102:7]

பின்னும்நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.

[102:8]

பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.