Quran translations in many languages

Quran in Tamil

At-Tîn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[95:1]

அத்தியின் மீதும்ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-

[95:2]

ஸினாய்‘ மலையின் மீதும் சத்தியமாக-

[95:3]

மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-

[95:4]

திடமாகநாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

[95:5]

பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில்மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.

[95:6]

எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர – (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.

[95:7]

எனவே (இதற்குப்) பின்னர்நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?

[95:8]

அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?